Search Previous Year Questions

Find real questions from previous competitive exam papers with answers and solutions.

Browse complete papers
200 matching questions · Page 2
Clear

Question 11

TNPSC Group 4 2021• Part A

'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

  1. AOption (a)

    அரசன் 

  2. BOption (b)

    வறுமை

  3. COption (c)

    மதில் 

  4. DOption (d)

    நோய்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

மதில் 

Why this answer is correct

சரியான பதில்: மதில்

Key Points

  • சோ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் மதில் ஆகும்.
  • கோ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் அரசன் ஆகும்.
  • நொ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் நோய் ஆகும்.
  • நோ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் வறுமை ஆகும்.​

Additional Information

  • தை - தைத்தல், தமிழ்மாதம்
  • வை - புல்
  • மை - அஞ்சனம்
  • வீ - மலர்
  • தே - கடவுள்

Question 12

TNPSC Group 4 2021• Part A

'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

  1. AOption (a)

    பெரிய

  2. BOption (b)

    சிறிய

  3. COption (c)

    குறைய

  4. DOption (d)

    நிரம்ப

  5. EOption (e)

    விடை தெரியவில்லை 

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

பெரிய

Why this answer is correct

சரியான பதில்: பெரிய

Key Points

  • “மா” என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் பெரிய ஆகும்.
  • 'மா' என்பது சிறந்த, உயர்ந்த, மாமரம், விலங்கு முதலியவற்றையும் குறிக்கும்.

Additional Informationஓரெழுத்து ஒரு மொழி:

  • மீ-  வான்
  • பே- மேகம்
  • பை- இளமை
  • நொ- நோய்

Question 13

TNPSC Group 4 2021• Part A

'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து.எழுதுக.

  1. AOption (a)

    மலை

  2. BOption (b)

    கடல்

  3. COption (c)

    ஆறு

  4. DOption (d)

    உயிர்வகை

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

கடல்

Why this answer is correct

சரியான பதில்: கடல்

Key Points

  • வாரணம், பெளவம்**,** கடல், புணரி, ஆழி, ஆர்கலி, முந்நீர் என்பது பரவை என்பதைக் குறிக்கும்.
  • சிங்கம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் அரிமா, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன் ஆகும்.
  • சந்தனம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் ஆரம், சாந்து, சாந்தம் ஆகும்.
  • மாலை என்ற சொல்லின் வேறு பெயர்கள் ஆரம், கண்ணி, காழ், பிணை ஆகும்.​
  • மலை என்பது ஈட்டம், காண்க என்பதையும் குறிக்கும்.
  • ஆறு என்பது நதி, வழி, சமயம், இயல்பு என்பதையும் குறிக்கும்

Additional Information 

  • புலி என்ற சொல்லின் வேறு பெயர்கள் வயமா, சித்திரகாயம், உழுவை, பாய்மா, வேங்கை ஆகும்.
  • புரை என்ற சொல்லின் வேறு பெயர்கள் உயர்வு, குற்றம், உண்மைச்சொல் ஆகும்.
  • நியமம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் அங்காடி, நியதி, தெரு ஆகும்.

Question 14

TNPSC Group 4 2021• Part A

மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.

  1. AOption (a)

    கூகை கூவும் 

  2. BOption (b)

    கூகை குனுகும் 

  3. COption (c)

    கூகை குழறும் 

  4. DOption (d)

    கூகை அலறும் 

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

கூகை குழறும் 

Why this answer is correct

சரியான பதில்: கூகை குழறும் 

Key Points

  • கூகை - குழறும்
  • ஆந்தை - அலறும்
  • புறா - குனுகும்
  • குயில் -கூவும்

Additional Information 

  • ஆடு - கத்தும்
  • காகம் - கரையும்
  • குதிரை - கனைக்கும்
  • சிங்கம் - முழங்கும்
  • எருது - எக்காளமிடும்
  • நரி - ஊளையிடும்
  • புலி - உறுமும்
  • பூனை - சீறும்
  • யானை - பிளிறும்
  • எலி - கீச்சிடும்
  • கோழி - கொக்கரிக்கும்
  • சேவல் - கூவும்
  • மயில் - அகவும்
  • வண்டு - முரலும்
  • பசு - கதறும்

Question 15

TNPSC Group 4 2021• Part A

சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

  1. AOption (a)

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது

  2. BOption (b)

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது

  3. COption (c)

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

  4. DOption (d)

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (d)D.

வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

Why this answer is correct

சரியான பதில்: option 4

Key Points

  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது என்பது சரியான தொடர் ஆகும்.
  • வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும்.
  • ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லின மெய் மிகும்.

Additional Information

  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது - ​வல்லின ஒற்று இல்லை
  • ​மாற்றங்களைச், கொண்டுவரப்போகிறது என வர வேண்டும்.
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது - வல்லின ஒற்று இல்லை
  • ​கொண்டுவரப்போகிறது என வர வேண்டும்.
  • ​வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது - வல்லின ஒற்று இல்லை
  • ​மாற்றங்களைச் என வர வேண்டும்.

Question 16

TNPSC Group 4 2021• Part A

குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.

  1. AOption (a)

    சார்பு

  2. BOption (b)

    மருந்து

  3. COption (c)

    கஃசு

  4. DOption (d)

    பசு

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (d)D.

பசு

Why this answer is correct

சரியான பதில்: பசு

Key Points

குற்றியலுகரம்:

  • குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம்
  • குற்றியலுகரம் என்பது 'கு, சு, டு, து, பு, று' ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் 

இறுதியில் வரும்பொழுது, ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கும்.

  • சான்று: காடு, பந்து
  • சார்பு, மருந்து, கஃசு முதலியவற்றில் இறுதியில் வரும் வல்லின உகரங்கம், ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கிறது. எனவே, இவை குற்றியலுகரத்திற்கு சான்றாகும்.
  • பசு என்பதன் இறுதியில் வரும் வல்லின உகரங்கம், ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கிறது. எனவே, இது குற்றியலுகரம் அன்று.

வகைகள்: 

  • நெடில் தொடர் குற்றியலுகரம்
  • ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
  • உயிர்த் தொடர் குற்றியலுகரம்
  • வன்தொடர் குற்றியலுகரம்
  • மென்தொடர் குற்றியலுகரம்
  • இடைத்தொடர் குற்றியலுகரம்

Additional Information

குற்றியலிகரம்:

  • இகரம் தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து  ஒலிப்பது ‘குற்றியலிகரம்’ எனப்படும்.
  • குற்றியலிகரம் - குறுமை + இயல் + இகரம்
  • சான்று: நாடு + யாது = நாடியாது

வகைகள்: 

  • தனிமொழிக் குற்றியலிகரம்
  • புணர்மொழிக் குற்றியலிகரம்

Question 17

TNPSC Group 4 2021• Part A

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

  1. AOption (a)

    மோனை

  2. BOption (b)

    எதுகை

  3. COption (c)

    இசைவு.

  4. DOption (d)

    இயைபு

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

இசைவு.

Why this answer is correct

சரியான பதில்: ​இசைவு

Key Points

  • மோனை, எதுகை, இயைபு முதலியன தொடை வகையைச் சார்ந்தது.
  • இசைவு என்பது தொடை வகையைச் சார்ந்தது அன்று.

எதுகைத் தொடை:

  • ஒரு செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை ஆகும்.
  • சான்று: கொல்லிமலை எனக்கினைய செல்லிமலை யம்மே!

மோனை தொடை:

  • சீர்களின் முதல் எழுத்து ஒன்றிவருவது மோனை தொடை எனப்படும்.
  • சான்று: அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

​இயைபு:

  • அடியின் கடைசி எழுத்து அல்லது கடைசிச் சொல் ஒன்றி வருவது இயைபு ஆகும்.
  • சான்று: நீல முடி தரித்த பல மலைசேர் நாடு

                 நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு

Additional Informationதொடை:

  • செய்யுள்களில் அடிகளிலும், சீர்களிலும் எழுத்துக்கள் ஒன்றி வருமாறு தொடுப்பது >தொடை ஆகும்.
  • இது எட்டு வகைப்படும். அவை:
  • மோனைத் தொடை
  • எதுகைத் தொடை
  • முரண் தொடை
  • இயைபுத் தொடை
  • அளபெடைத் தொடை
  • இரட்டைத் தொடை
  • அந்தாதித் தொடை
  • செந்தொடை

Question 18

TNPSC Group 4 2021• Part A

பொருத்துக.

(a)சோறு1.குடித்தான்
(b)பால்2.உண்டான்
(c)பழம்3.பருகினான்
(d)நீர்4.தின்றான்
  1. AOption (a)

    (a) - (1), (b) - (3), (c) - (4), (d) - (2)

  2. BOption (b)

    (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

  3. COption (c)

    (a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)

  4. DOption (d)

    (a) - (4), (b) - (1), (c) - (2), (d) - (3)

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

(a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)

Why this answer is correct

சரியான பதில்: (a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)

Key Points

சோறுஉண்டான்
பால்பருகினான்
பழம்தின்றான்
நீர்குடித்தான்

Additional Informationவினை மரபுகள்:

  • அம்பு எய்தார்.
  • ஓவியம் புனைந்தாள்.
  • கூடை முடைந்தார்.
  • மாலை தொடுத்தாள்.
  • பாய் பின்னினார்.

Question 19

TNPSC Group 4 2021• Part A

பொருத்துக.

(a)8 7 61.௩ ௬ ௯
(b)5 4 32.௩ ௨ ௧
(c)3 2 13.௫ ௪ ௩
(d)3 6 94.௮ ௭ ௬
  1. AOption (a)

    (a) - (2), (b) - (4), (c) - (1), (d) - (3)

  2. BOption (b)

    (a) - (4), (b) - (1), (c) - (3), (d) - (2)

  3. COption (c)

    (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

  4. DOption (d)

    (a) - (3), (b) - (2), (c) - (1), (d) - (4)

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

(a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

Why this answer is correct

சரியான பதில்: (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

Key Points

8 7 6௮ ௭ ௬
5 4 3௫ ௪ ௩
3 2 1௩ ௨ ௧
3 6 9௩ ௬ ௯

Additional Informationதமிழ் எண்கள்:

  • 1 - ௧
  • 2 - ௨
  • 3 - ௩
  • 4 - ௪
  • 5 - ௫
  • 6 - ௬
  • 7 - ௭
  • 8 - ௮
  • 9 - ௯
  • 10 - ௧0

Question 20

TNPSC Group 4 2021• Part A

பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள் 

  1. AOption (a)

    ஆழ்வார்கள் 

  2. BOption (b)

    சித்தர்கள்

  3. COption (c)

    நாயன்மார்கள்

  4. DOption (d)

    புலவர்கள்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

சித்தர்கள்

Why this answer is correct

சரியான பதில்: சித்தர்கள்

Key Points

  • பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள் சித்தர்கள் ஆவர்.

சித்தர்கள்:

  • கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • 'சித்தர்கள்' என்றால் நிறைவடைந்தவர் என்பது பொருள்.
  • தமிழில் 'சித்து' என்னும் சொல் மனம், கருத்து, ஆன்மா என்ற பொருள்களைக் கொண்டது.
  • சித்தர்கள் மொத்தம் பதினெட்டு ஆவர். அவர்கள் நந்தீசர், அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்கண்ணர், போகர், கருவூரார், கொங்கணவர், காலாங்கி நாதர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பைச் சித்தர், இடைக்காடர், சட்டை முனி, அழுகுணிச் சித்தர்,அகப்பேய்ச் சித்தர், தன்வந்திரி.
  • சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர் ஆவார்.
  • சித்தர் நூல்களில் தலைசிறந்த நூல் திருமந்திரம் ஆகும். அதனை இயற்றியவர் திருமூலர் ஆவார்.
  • 'செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர் பிறந்த தமிழ்நாடு' எனச் சித்தர்களின் பெருமையைப் பாரதியார் பாராட்டியுள்ளார்.

Additional Informationஆழ்வார்கள்:

  • கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்.
  • ஆழ்வார்கள் பாடிய மொத்த பாடல்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்று நாதமுனி பெயரிட்டுள்ளார்.
  • ஆழ்வார்கள் இயற்றிய நூல்கள் 24 ஆகும்.
  • ஆழ்வார்கள் பாடிய மொத்த பாடல்கள் எண்ணிக்கை 3776 ஆகும்.
ஆழ்வார்கள்இயற்றிய நூல்கள்
1.பொய்கை ஆழ்வார்முதல் திருவந்தாதி
2.பூதத்தாழ்வார்இரண்டாம் திருவந்தாதி
3.பேயாழ்வார்மூன்றாம் திருவந்தாதி
4.திருமழிசை ஆழவார்திருச்சந்த விருத்தம்
நான்முகன் திருவந்தாதி
5.மதுரகவி ஆழ்வார்கண்ணி நுண் சிறுத்தாம்பு
6.நம்மாழ்வார்திரு ஆசிரியம்
திருவாய் மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி
7.குலசேகர ஆழ்வார்பெருமாள் திருமொழி
8.பெரியாழ்வார்பெரியாழ்வார் திருமொழி
திருப்பல்லாண்டு
9.ஆண்டாள்திருப்பாவை
நாச்சியார் திருமொழி
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்திருமாலை
திருப்பள்ளியெழுச்சி
11.திருப்பாணாழ்வார்அமலனாதி பிரான்
12.திருமங்கை ஆழ்வார்பெரிய திருமொழி
திருக் குறுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
திருவெழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்

நாயன்மார்கள்:

  • கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிவபெருமானைப் போற்றிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்.
  • சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.
  • அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்து மூவரின் வரலாற்றை 'திருத்தொண்டர் புராணம்' என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • நாயன்மார்கள் பாடிய பாடல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
  • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரைச் 'சை��சமய குரவர்கள்' என்பர்.