Search Previous Year Questions

Find real questions from previous competitive exam papers with answers and solutions.

Browse complete papers
200 matching questions · Page 1
Clear

Question 1

TNPSC Group 4 2021• Part A

உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

'உள்ளங்கை நெல்லிக்கனி போல'

  1. AOption (a)

    வெளிப்படைத் தன்மை 

  2. BOption (b)

    வெளிப்படையற்ற தன்மை

  3. COption (c)

    மறைத்து வைத்தல் 

  4. DOption (d)

    தன்னலமின்மை

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

வெளிப்படைத் தன்மை 

Why this answer is correct

சரியான பதில்: வெளிப்படைத் தன்மை 

Key Points 

உவமை தொடர் மற்றும் அதன் பொருள்கள்: 

  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படைத் தன்மை
  • ​உமையும், சிவனும் போல் - நெருக்கம், நட்பு
  • உயிரும் உடம்பும் போல் - ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • ஊசியும் நூலும் போல் - நெருக்கம், உறவு
  • ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
  • ஊருணி நீர் நிறைதல் - செல்வம்​

Additional Information

  • எட்டாப்பழம் புளித்தது போல் - ஏமாற்றம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் - வேதனையைத் தூண்டுதல்
  • எலியும் பூனையும் போல் - பகை, விரோதம்
  • ஏழை பெற்ற செல்வம் போல் - மகிழ்ச்சி​

Question 2

TNPSC Group 4 2021• Part A

'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.

  1. AOption (a)

    தெளிவாகத் தெரியாது

  2. BOption (b)

    தெளிவாகத் தெரியும் 

  3. COption (c)

    நிலைத்து நிற்கும் 

  4. DOption (d)

    நிலைத்து நிற்காது

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

நிலைத்து நிற்கும் 

Why this answer is correct

சரியான பதில்: நிலைத்து நிற்கும்

Key Points

  • சிலை மேல் எழுத்து போல - நிலைத்து நிற்கும்
  • சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலை மேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்க்கைக்குச் சிறப்பான வழி காட்டும்.

Additional Informationநீர்மேல் எழுத்து போல:

  • குடிகாரனின் வாக்கு நீர்மேல் எழுத்து போல நிலைத்து நிற்காது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல:

  • தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகப் புரிந்தது.

கிணற்றுத் தவளை போல:

  • மல்லிகா படித்திருந்தாலும், கிணற்றுத் தவளை போல வெளி உலகம் தெரியாமல் இருந்தாள்.

Question 3

TNPSC Group 4 2021• Part A

ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?

  1. AOption (a)

    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

  2. BOption (b)

    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

  3. COption (c)

    ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது

  4. DOption (d)

    ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர் 

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது

Why this answer is correct

சரியான பதில்: ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.

Key Points

  • ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது ஆகும்.
  • செய்வினைத்தொடர்: ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்
  • செயப்பாட்டு வினைத்தொடர்: ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது​

Additional Information செய்வினைத்தொடர்:

  • ஒரு எழுவாய் ஒரு வாக்கியத்தின் வினைச் சொல்லுக்குரிய கருத்தாகவாக அமையுமிடத்து அவ்வினை செய்வினை எனப்படும்.
  • எ.கா: ஆசிரியர் புத்தகத்தை எழுதினார்.

​செயப்பாட்டு வினைத்தொடர்:

  • செயப்படுபொருளைக் கருத்தாவாகக் கொள்ளும் வினைகள் செயப்பாட்டு வினை எனப்படும்.
  • எ.கா: புத்தகம் ஆசிரியரால் எழுதப்பட்டது.

Question 4

TNPSC Group 4 2021• Part A

மாலதி மாலையைத் தொடுத்தாள்.

இது எவ்வகை வாக்கியம்?

  1. AOption (a)

    செய் வினை 

  2. BOption (b)

    செயப்பாட்டு வினை 

  3. COption (c)

    தன் வினை  

  4. DOption (d)

    பிற வினை 

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

செய் வினை 

Why this answer is correct

சரியான பதில்: செய்வினை

Key Points

  • மாலதி மாலையைத் தொடுத்தாள் என்பது செய்வினை வாக்கியம் ஆகும்.
  • செயலைச் செய்பவரை முதலில் வாக்கியத்தில் அமைப்பது செய்வினை வாக்கியமாகும்.
  • எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினை வாக்கியம் ஆகும்.
  • ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும்.
  • வாக்கியத்தில் செயப்படுபொருளோடு 'ஐ' எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும்.
  • (எ. கா) மாலதி மாலையைத் தொடுத்தாள்
  • மாலையைத் தொடுத்தவர் மாலதி இவ்வாறு கருத்தாவை எழுவாயாகக் கொள்ளும் வினைகளையே செய்வினை ஆகும்.

Additional Information​செயப்பாட்டு வினை: ​​

  • செயப்படுபொருளை கருத்தாவாகக் கொள்ளும் வினைகள் செயப்பாட்டு வினை எனப்படும்.
  • செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும்.
  • எழுவாயோடு 'ஆல்' என்ற 3 ஆம் வேற்றுமை உருபும், பயனிலையோடு 'பட்டது, பெற்றது' என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
  • (எ. கா) மாலை மாலதியால் தொடுக்கப்பட்டது.
  • ​தொடுத்தவர் மாலதி அவரே கருத்தாவாகும். ஆனால் எழுவாயாக 'மாலை' இருக்கிறது.
  • கருத்தாவாக செயப்படுபொருள் இருக்கிறது.

தன் வினை:

  • ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை எனப்படும்.
  • (எ. கா) முருகன் திருந்தினான்

​பிறவினை:

  • ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் எனப்படும்.
  • (எ. கா) கோதை நடனம் ஆட்டுவித்தாள்

Question 5

TNPSC Group 4 2021• Part A

இலக்கணக் குறிப்பறிதல்.

சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.

  1. AOption (a)

    இடைச்சொல் தொடர்

  2. BOption (b)

    விளித் தொடர் 

  3. COption (c)

    எழுவாய்த் தொடர்

  4. DOption (d)

    உரிச்சொல் தொடர் 

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (d)D.

உரிச்சொல் தொடர் 

Why this answer is correct

சரியான பதில்: உரிச்சொல் தொடர்

Key Points

  • சாலச் சிறந்தது - உரிச்சொல் தொடர்
  • உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்ந்து வருவது உரிச்சொல் தொடர் ஆகும்.
  • சால என்பது உரிச்சொல் ஆகும்.
  • அதனைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.

Additional Informationஇடைச்சொல் தொடர்:

  • இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்ந்து வருவது இடைச்சொல் தொடர் ஆகும்.
  • (எ. கா) மற்றொன்று - மற்று + ஒன்று
  • மற்று - இடைச்சொல்
  • ஒன்று - இடைச்சொல்லை அடுத்து நின்று பொருள் தரும் சொல்

விளித் தொடர்:

  • விளியுடன் வினை தொ��ர்ந்து வருவது விளித்தொடர் ஆகும்.
  • (எ. கா) நண்பா எழுது!
  • 'நண்பா' என்னும் விளிப்பெயர் 'எழுது' என்னும் வினை பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.

எழுவாய்த் தொடர்:

  • எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்ந்து வருவது எழுவாய்த் தொடர் ஆகும்.
  • (எ. கா) இனியன் வந்தான்
  • 'இனியன்' என்னும் எழுவாயைத் தொடர்ந்து 'வந்தான்' என்னும் பயனிலை வந்துள்ளது.

Question 6

TNPSC Group 4 2021• Part A

பெயர்ச்சொற்களைப் பொருத்துக.

(a)மல்லிகை1.சினைப்பெயர்
(b)பள்ளி2.பண்புப்பெயர்
(c)கிளை3.இடப்பெயர்
(d)இனிமை4.பொருள்பெயர்
  1. AOption (a)

    (a) - (4), (b) - (3), (c) - (1), (d) - (2)

  2. BOption (b)

    (a) - (3), (b) - (4), (c) - (2), (d) - (1)

  3. COption (c)

    (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

  4. DOption (d)

    (a) - (2), (b) - (3), (c) - (1), (d) - (4)

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

(a) - (4), (b) - (3), (c) - (1), (d) - (2)

Why this answer is correct

சரியான பதில்: (a) - (4), (b) - (3), (c) - (1), (d) - (2)

Key Points

(a)மல்லிகை1.பொருள்பெயர்
(b)பள்ளி2.இடப்பெயர்
(c)கிளை3.சினைப்பெயர்
(d)இனிமை4.பண்புப்பெயர்

Additional Information

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:

  • பொருட்பெயர்
  • இடப் பெயர்
  • காலப்பெயர்
  • தொழிற்பெயர்
  • சினைப் பெயர்
  • பண்புப் பெயர்
  • காலப்பெயர்

பொருட்பெயர்:

  • ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - பொன்னன், புத்தகம்

​சினைப்பெயர்: 

  • ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வேர், மலர்.

இடப் பெயர்:

  • ஒரு இடத்தைக் குறிக்கும் பெயர் இடப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வீதி, ஊர்

பண்புப் பெயர்/குணப் பெயர்:

  • ஒரு பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் குணப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - இனிப்பு, அன்பு

தொழிற்பெயர்:

  • ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வற்றல், படித்தல்

காலப் பெயர்:

  • ஒரு காலத்தைக் குறிக்கும் பெயர் காலப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - காலை, இரவு

Question 7

TNPSC Group 4 2021• Part A

பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.

(a) காலப்பெயர் - செம்மை

(b) சினைப்பெயர் - கண்

(c) பண்புப்பெயர் - ஆண்டு

(d) தொழிற்பெயர் - ஆடுதல்

  1. AOption (a)

    (a), (c)

  2. BOption (b)

    (a), (b)

  3. COption (c)

    (c), (d)

  4. DOption (d)

    (a), (d)

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

(a), (c)

Why this answer is correct

சரியான பதில்: (a), (c)

Key Points

  • செம்மை என்பது பண்புபெயர் ஆகும்.
  • ஆண்டு என்பது காலப் பெயர் ஆகும்.

காலப் பெயர்:

  • ஒரு காலத்தைக் குறிக்கும் பெயர் காலப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - காலை, இரவு

​பண்புப் பெயர்/குணப் பெயர்:

  • ஒரு பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் குணப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - இனிப்பு, அன்பு

Additional Information

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:

  • பொருட்பெயர்
  • இடப் பெயர்
  • காலப்பெயர்
  • தொழிற்பெயர்
  • சினைப் பெயர்
  • பண்புப் பெயர்
  • காலப்பெயர்

பொருட்பெயர்:

  • ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - பொன்னன், புத்தகம்

​சினைப்பெயர்: 

  • ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வேர், மலர்.

இடப் பெயர்:

  • ஒரு இடத்தைக் குறிக்கும் பெயர் இடப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வீதி, ஊர்

தொழிற்பெயர்:

  • ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வற்றல், படித்தல்

Question 8

TNPSC Group 4 2021• Part A

'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

  1. AOption (a)

    கேட்டு 

  2. BOption (b)

    கேட்ட

  3. COption (c)

    கேட்டல்

  4. DOption (d)

    கேட்டான்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

கேட்டு 

Why this answer is correct

சரியான பதில்: கேட்டு

Key Points

  • 'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் கேட்டு ஆகும்.
  • ஒரு எச்ச வினையானது வினைச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது வினையெச்சம் எனப்படும்.
  • வினைச் சொற்கள்  உ, இ, ய், அ, ஆல் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) படித்து, ஓடி, கேட்டு ​

Additional Information

  • கேட்ட - பெயரெச்சம்
  • ஒரு எச்ச வினையானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
  • பெயர்ச் சொற்கள் அ, உம் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) வந்த, சென்ற
  • கேட்டல் - தொழிற்பெயர்
  • வேர்ச்சொல்லோடு ‘தல்’ விகுதி சேர்ந்தால் அது தொழிற்பெயர் ஆகும்.
  • அல், வை, வு, கை ஆகிய விகுதிகள் சேர்ந்தாலும் அது தொழிற்பெயராகும்.
  • (எ. கா) பாடுதல், படித்தல், காணல்
  • கேட்டான் - வினைமுற்று 
  • ​ஒரு வினை எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்கும் பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்.

Question 9

TNPSC Group 4 2021• Part A

'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.

  1. AOption (a)

    தணி

  2. BOption (b)

    தணிந்த

  3. COption (c)

    தணிந்து

  4. DOption (d)

    தனி

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

தணி

Why this answer is correct

சரியான பதில்: தணி

Key Points

  • 'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல் தணி ஆகும்.
  • பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும்.
  • தணிந்தது - தணி + ந் + த் + த் + உ
  • ஒரு சொல்லின் வேர்ச்சொல் பகுதியாக அமையும்.

Additional Information

  • தணிந்த - பெயரெச்சம்
  • ஒரு எச்ச வினையானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
  • பெயர்ச் சொற்கள் அ, உம் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) வந்த பையன், சென்ற மனிதன்
  • ​தணிந்து - வினையெச்சம் 
  • ஒரு எச்ச வினையானது வினைச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது வினையெச்சம் எனப்படும்.
  • வினைச் சொற்கள்  உ, இ, ய், அ, ஆல் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) படித்து முடித்தான், ஓடி களைத்தான், கேட்டு ​மகிழ்ந்தான்
  • ​தனி - பெயர்ச்சொல்

Question 10

TNPSC Group 4 2021• Part A

'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

  1. AOption (a)

    தந்த 

  2. BOption (b)

    தரு 

  3. COption (c)

    தா

  4. DOption (d)

    தந்து

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

தா

Why this answer is correct

சரியான பதில்: தா

Key Points

  • 'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல் தா ஆகும்.
  • பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும்.
  • தருக - த (தா) + ருக
  • ஒரு சொல்லின் வேர்ச்சொல் பகுதியாக அமையும்.

Additional Information

  • தந்த - பெயரெச்சம்
  • ஒரு எச்ச வினையானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
  • பெயர்ச் சொற்கள் அ, உம் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) வந்த, சென்ற
  • ​தந்து - வினையெச்சம் 
  • ஒரு எச்ச வினையானது வினைச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது வினையெச்சம் எனப்படும்.
  • வினைச் சொற்கள்  உ, இ, ய், அ, ஆல் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) படித்து, ஓடி, கேட்டு ​​
Previous
Page 1