Search Previous Year Questions

Find real questions from previous competitive exam papers with answers and solutions.

Browse complete papers
200 matching questions · Page 9
Clear

Question 81

TNPSC Group 4 2021• Part A

புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்

  1. AOption (a)

    உ.வே.சா.

  2. BOption (b)

    ஜி.யு. போப்

  3. COption (c)

    சீகன் பால்கு ஐயர்

  4. DOption (d)

    வீரமாமுனிவர்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

உ.வே.சா.

Why this answer is correct

சரியான பதில்: உ.வே.சா.

Key Points

  • புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார்.

உ.வே. சாமிநாதர்:

  • முழுப்பெயர்: உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்
  • இயற்பெயர்: வேங்கடரத்தினம்
  • காலம்: 1855 - 1942
  • பிறந்த ஊர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
  • சிறப்புப் பெயர்: தமிழ் தாத்தா
  • இவரின் ஆசிரியர் பெயர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்.
  • இவர் பதிபித்த முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்.
  • இவர் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது 'என் சரிதம்' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
  • பதிப்பித்த நூல்கள்: எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, அந்தாதி, பரணி, உலா, கோவை, வெண்பா நூல்கள், இரட்டை மணிமாலை, புராணங்கள்.
  • உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

புறநானூறு:

  • இது புறத்திணைப் பற்றிக் கூறும் நூலாகும்.
  • இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
  • புறநானூறு 4 அடிச்சிற்றெல்லையும், 40 அடிப் பேரெல்லையும் கொண்டது.
  • பாவகை: ஆசிரியப்பா
  • தொகுத்தவர்: பெயர் தெரியவில்லை
  • தொகுப்பித்தவர்: பெயர் தெரியவில்லை
  • புறநானுற்றை முதன்முதலாக பதிப்பித்தவர் உ. வே. சா ஆவார்.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

Additional Informationவீரமாமுனிவர்:

  • இயர்பெயர்: கான்சுடான்சு சோசப் பெசுகி
  • பிறந்த ஊர்: இத்தாலி
  • வீரமாமுனிவரின் படைப்புகள்: தேம்பாவணி, சதுரகராதி (தமிழின் முதல் அகராதி), தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்த குருகதைகள்.
  • இவர் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சந்தாசாகிப், "இஸ்மத் சன்னியாசி" என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியுள்ளார்.

 ஜி. யு. போப்:

  • முழுப்பெயர்: ஜியார்ஜ் யுக்ளோ போப்
  • பிறந்த ஊர்: கனடாவின் பிரின்ஸ் எட்வெர்த் தீவு
  • சிறப்புப்பெயர்: பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி.
  • மொழிபெயர்ப்பு: திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலியன நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
  • ஜி.யு.போப் எழுதிய 'தமிழ்க்கையேடு' காந்தியடிகளைக் கவர்ந்த நூலாகும்.​

சீகன் பால்கு ஐயர்:

  • சீகன் பால்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர்.
  • இதுவே இந்தியாவின் முதல் அச்சுக்கூடம் ஆகும்.
  • முதன் முதலில் அச்சேறிய மொழி தமிழ் மொழி ஆகும்.
  • தமிழில் முதலில் அச்சிடப்பட்டது தமிபிரான் வணக்கம் என்ற நூல்.
  • பைபிளைத் தமிழில் முதன் முதலாக மொழி பெயர்த்தவர்.
  • தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு செய்ததுடன், தமிழ்-இலத்தீன் அகராதியையும் எழுதியவர்.

Question 82

TNPSC Group 4 2021• Part A

"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்" கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

  1. AOption (a)

    குறுந்தொகை

  2. BOption (b)

    ஐந்குறுநூறு 

  3. COption (c)

    அகநானூறு

  4. DOption (d)

    நற்றிணை 

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

ஐந்குறுநூறு 

Why this answer is correct

சரியான பதில்: ஐந்குறுநூறு 

Key Points

  • "மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்" கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் ஐந்குறுநூறு ஆகும்.​

ஐங்குறுநூறு:

  • பாடல்கள் - 500
  • பாடிய புலவர்கள் - 5
  • அடி எல்லை - 3 - 6
  • பாவகை - ஆசிரியப்பா
  • தொகுத்தவர் - கூடலூர்கிழார்
  • தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • முதலில் பதிப்பித்தவர் - உ. வே. சாமிநாதையர்
  • முதலில் உரை எழுதியவர் - ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
  • கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெருதேவனார்​

Additional Information

குறுந்தொகை: 

  • பாடல்கள் - 401
  • பாடிய புலவர்கள் - 205
  • அடி எல்லை - 4-8
  • பாவகை - ஆசிரியப்பா
  • தொகுத்தவர் - பூரிக்கோ
  • தொகுப்பிதவர் - பெயர் தெரியவில்லை
  • கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • சிறப்புப் பெயர்கள் - நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • இது குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப் பெயர்பெற்றது.
  • இதனை 1915ல் முதன்முதலாக பதிப்பித்தவர் சௌரிப்பெருமாள் அரங்கனார் ஆவார்.
  • இது உரையாசிரியர் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் ஆகும்.
  • இது பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு போன்ற செய்திகளைக் கூறுகிறது.

அகநானூறு:

  • ​தொகுப்பு: எட்டுத்தொகை
  • பாடல்கள்: 400 + 1
  • அடியெல்லை: 13-31
  • தொகுத்தவர்: உருத்திர சன்மனான்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பிரிவுகள்: 
  • களிற்றியானை நிரை -120 பாடல்கள்
  • மணியிடை பவளம் - 180 பாடல்கள்
  • நித்திலக்கோவை - 100 பாடல்கள்

நற்றிணை:​

  • அடியெல்லை: 9 -12
  • ​தொகுத்தவர்: தெரியவில்லை
  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  • தொகுதி: எட்டுத்தொகை
  • பாடல்கள்: 400 + 1

Question 83

TNPSC Group 4 2021• Part A

சரியான இணையைத் தேர்வு செய்க.

(a) துவரை - தாமரை மலர் 

(b) மரை - பவளம் 

(c) விசும்பு - வானம் 

(d) மதியம் - நிலவு

  1. AOption (a)

    (a) மற்றும் (b) சரி 

  2. BOption (b)

    (b) மற்றும் (c) சரி 

  3. COption (c)

    (c) மற்றும் (d) சரி 

  4. DOption (d)

    (d) மற்றும் (a) சரி

  5. EOption (e)

    விடை தெரியவில்லை 

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

(c) மற்றும் (d) சரி 

Why this answer is correct

சரியான பதில்: (c) மற்றும் (d) சரி

Key Points

  • துவரை - பவளம்
  • மரை - தாமரை மலர்
  • விசும்பு - வானம்
  • மதியம் - நிலவு​

Additional Information

  • வேரி என்ற சொல்லின் பொருள் தேன் ஆகும்.
  • பகடு என்ற சொல்லின் பொருள் எருமைக்கடா ஆகும்.​
  • நசை என்ற சொல்லின் பொருள் விருப்பம் ஆகும்.
  • கழை என்ற சொல்லின் பொருள் கரும்பு ஆகும்.

Question 84

TNPSC Group 4 2021• Part A

பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.

(a)சிறுபஞ்சமூலம்1.காப்பிய இலக்கியம்
(b)குடும்பவிளக்கு2.சங்க இலக்கியம்
(c)சீவகசிந்தாமணி3.அற இலக்கியம்
(d)குறுந்தொகை4.தற்கால இலக்கியம்
  1. AOption (a)

    (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

  2. BOption (b)

    (a) - (3), (b) - (1), (c) - (4), (d) - (2)

  3. COption (c)

    (a) - (2), (b) - (3), (c) - (1), (d) - (4)

  4. DOption (d)

    (a) - (4), (b) - (1), (c) - (2), (d) - (3)

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

(a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

Why this answer is correct

சரியான பதில்: (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

Key Points

(a)சிறுபஞ்சமூலம்அற இலக்கியம்
(b)குடும்பவிளக்குதற்கால இலக்கியம்
(c)சீவகசிந்தாமணிகாப்பிய இலக்கியம்
(d)குறுந்தொகைசங்க இலக்கியம்

சிறுபஞ்சமூலம்:

  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.
  • அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கும்.
  • சிறுபஞ்சமூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
  • ஆசிரியர்: காரியாசான்
  • பாடல்கள்: 102
  • பாவகை: வெண்பா
  • இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் "அம்மை" என்ற வனப்பிற்கு உரியது.

குறுந்தொகை:

  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும்.
  • இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
  • குறுந்தொகை 4 அடிச்சிற்றெல்லையும், 8 அடிப் பேரெல்லையும் கொண்டது.
  • பாவகை: ஆசிரியப்பா
  • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

சீவக சிந்தாமணி:

  • ஆசிரியர்: திருத்தக்க தேவர்
  • பாவகை: விருத்தப்பா
  • இலம்பகம்: 13
  • பாடல்கள்: 3145
  • காப்பியத் தலைவன்: சீவகன்
  • முதல் இலம்பகம்: நாமகள் இலம்பகம்
  • இறுதி இலம்பகம்: முக்தி இலம்பகம்
  • சிறப்புப் பெயர்கள்: மண நூல், முக்தி நூல், காம நூல், மறை நூல், முடிபொருள் தொடர்நிலை செய்யுள், இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம், சிந்தாமணி, தமிழ் இலக்கிய நந்தாமணி, முடி நூல், மோச்ச நூல்.
  • உரை எழுதியவர்: நச்சினார்க்கினியர்
  • முதலில் பதிப்பித்தவர்: உ. வே. சா
  • அரங்கேற்றிய இடம்: மதுரை தமிழ் சங்கம்
  • இது விருத்தப்பாவால் ஆன முதல் தமிழ் காப்பியம் ஆகும்.
  • சிந்தாமணி என்பதற்கு ஒளி குன்றாத மணி என்று பொருள்.
  • இது வடமொழியில் உள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி என்ற இரு நூல்களைத் தழுவி எழுதிய நூல் ஆகும்.

குடும்பவிளக்கு:

  • இந்நூல் தற்கால இலக்கிய நூலாகும்.
  • இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • ஆசிரியர்: பாரதிதாசன்

Additional Information

இயற்கை ஓவியம்பத்துப்பாட்டு
இயற்கை தவம்சிந்தாமணி
இயற்கைப் பரிணாமம்கம்பராமாயணம்
இயற்கை அன்புபெரியபுராணம்
இயற்கை இன்பக்கலம்கலித்தொகை
இயற்கை வாழ்வில்லம்திருக்குறள்
இயற்கை இறையுறையுள்தேவார திருவாசக திருவாய் மொழிகள்
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

Question 85

TNPSC Group 4 2021• Part A

"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்

  1. AOption (a)

    பாரதியார்

  2. BOption (b)

    சுரதா

  3. COption (c)

    பாரதிதாசன் 

  4. DOption (d)

    வாணிதாசன் 

  5. EOption (e)

    விடை தெரியவில்லை 

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

பாரதிதாசன் 

Why this answer is correct

சரியான பதில்: பாரதிதாசன் 

 

Key Points

  • "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனத் திருக்குறளைபாடியவர் பாரதிதாசன் ஆவார்.

பாரதிதாசன்:

  • ஊர் - புதுவை
  • காலம் - 29.04.1891-21.04.1964
  • பெற்றோர் - கனகசபை-இலக்குமியம்மாள்
  • இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
  • சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவி, புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ் நாட்டின் இரசூல் கம்சதேவ்.
  • இயற்றிய நூல்கள் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், இசையமுது, கண்ணகி புரட்சிக் காப்பியம், இளைஞர் இலக்கியம், இன்பக்கடல், இசையமுது, தேனருவி.
  • இவர் பாரதியார் மீது பற்று கொண்டதால் பாரதிதாசன் என பெயர் மாற்றிக்கொண்டார்.
  • இவர் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
  • இவர் கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் அவார்.
  • இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர் ஆவார்.
  • இவர் அறிஞர் அண்ணா அவர்களால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டவர் ஆவார்.
  • இவர் குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
  • இவர் பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் ஆவார்.
  • இவருடைய பெயரில் திருச்சியில் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
  • இவர் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை பகுத்தறிவு, மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் போன்ற புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டு பாடுவதால் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். மேலும் இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.

Additional Information

பாரதியார்:

  • ​ஊர்: எட்டயபுரம்
  • பிறப்பு: 11 திசம்பர் 1882
  • இறப்பு: 11 செப்டம்பர் 1921
  • பாரதியார் நடத்திய இதழ்கள்: சூரியோதயம், இந்தியா, விஜயா, கர்மயோகி.
  • இவரின் கூற்றுகள்:
  • நாடும் மொழியும் நமதிரு கண்கள்,
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணொம்,
  • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்.
  • 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 

பேணி வளர்த்திடும் ஈசன்;'

  • 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'.

  • பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்
  • சிறப்புத் தொடர்கள்: 
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணியின் கூற்று),
  • சென்னையின் தமிழ்க் கவிஞன் (ஆங்கில பத்திரிகையாளர் நெவின்சனின் கூற்று).

சுரதா:

  • இயற்பெயர்: இராசகோபாலன்
  • சுரதா பெயர் காரணம்:
  • பாரதிதாசனின் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • சுப்புரத்தினதாசனின் சுருக்கமே சுரதா ஆகும்.
  • படைப்புகள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்
  • விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.
  • சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள்: இலக்கியம், விண்மீன்,ஊர்வலம்.

வாணிதாசன்:

  • வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எதிராசலு ஆகும்.
  • இவர் புதுச்சேரி அருகில் வில்லியனூரில் பிறந்தார்.
  • திருக்காமு- துளசி அம்மையார் இவரின் பெற்றோர் ஆவர்.
  • 'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
  • திரு. வி. க. 'திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' என்று வாணிதாசனைப் பாராட்டியுள்ளார்.
  • பிரென்ச் குடியரசு தலைவர் 'செவாலியர்' விருதினை வணிதாசனுக்கு வழங்கியுள்ளார்.
  • படைப்புகள்: கொடிமுல்லை, தமிழச்சி, இன்ப இலக்கியம், எழிலோவியம், தொடுவானம், தீர்த்த யாத்திரை, பொங்கல் பரிசு, வாணிதாசன் கவிதைகள், எழில் விருத்தம்
  • புனைப்பெயர்கள்: ​ரமி, கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்தமிழ்நாட்டுத் தாகூர்

Question 86

TNPSC Group 4 2021• Part A

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

  1. AOption (a)

    1832

  2. BOption (b)

    1812

  3. COption (c)

    1842

  4. DOption (d)

    1852

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

1812

Why this answer is correct

சரியான பதில்: 1812

Key Points

  • திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812 ஆகும்.
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசம் ஆவார்.

திருக்குறள்:

  • ஆசிரியர்: திருவள்ளுவர்
  • பாவகை: குறள் வெண்பா
  • அதிகாரம்:133
  • குறள்கள்: 1330
  • பால்கள்: 3
  • இயல்கள்: 9
  • சிறப்புப் பெயர்கள்: பொதுமறை, தமிழ் மறை, உலகப்பொதுமறை, முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவ பயன், பொருளுறை, முதுமொழி, திருவள்ளுவம், தமிழர் திருமறை, தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறவிலக்கியம்.
  • திருவள்ளுவர் காலம்: கி. மு. 31ஆம் நூற்றாண்டு.
  • இந்த ஆண்டை தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  • திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்: மணக்குடவர், தாமத்தர், நச்சர், மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர், பரிமேழலகர், பரிதி, திருமலையர்.
  • இது 3 பால்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அறத்துப்பால் - 38 அதிகாரம்
  • பொருட்பால் - 70 அதிகாரம்
  • காமத்துப்பால் - 25 அதிகாரம்
  • பொருட்பால் 3 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அரசியல் - 25 அதிகாரம்
  • அங்கவியல் - 32 அதிகாரம்
  • ஒழிபியல் - 13 அதிகாரம்
  • அறத்துப்பால் 4 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • பாயிறவியல் - 4 அதிகாரம்
  • இல்லறவியல் - 20 அதிகாரம்
  • துறவறவியல் - 13 அதிகாரம்
  • ஊழியல் - 1 அதிகாரம்
  • காமத்துப்பால் 2 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • களவியல் - 7 அதிகாரம்
  • கற்பியல் - 18 அதிகாரம்​​​

Additional Informationதிருவள்ளுவர்:

  • மனைவி: வாசுகி
  • ஊர்: திருமயிலாப்��ூர்
  • சிறப்புப் பெயர்கள்: நாயனார், மாதானுபங்கி,தேவர், முதற் பாவலர், தெய்வ புலவர், நான்முகனார்,செந்நாப்போதார், பொய்யில் புலவர், பெருநாவலர்,வான்புகழ் வள்ளுவர்.
  • பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு" என்று பாராட்டியுள்ளார்.
  • பாரதிதாசன் "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" என்று வள்ளுவரைப் பாராட்டியுள்ளார்.

Question 87

TNPSC Group 4 2021• Part A

திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள் 

  1. AOption (a)

    கம்பர், இளங்கோ 

  2. BOption (b)

    கம்பர், திருவள்ளுவர்

  3. COption (c)

    திருவள்ளுவர், இளங்கோ

  4. DOption (d)

    இளங்கோ, பாரதியார்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை 

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

கம்பர், திருவள்ளுவர்

Why this answer is correct

சரியான பதில்: கம்பர், திருவள்ளுவர்

Key Points

  • திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள் கம்பர், திருவள்ளுவர் ஆவர்.
  • 'கதியாவார்' இதில் 'க' என்பது கம்பனையும், 'தி' என்பது திருவள்ளுவரையும் குறிக்கும்.
  • செல்வக்கேசவராயர் கம்பன் பற்றிய அய்வு நூலான 'கம்பநாடர்' நூலும், வள்ளுவர் பற்றிய ஆய்வு நூலான 'வள்ளுவர்' நூலும் படைத்துள்ளார்.

Additional Informationகம்பர்:

  • காலம்: கி.பி. 12ஆம் நூற்றாண்டு
  • சமயம்: வைணவம்
  • பிறந்த ஊர்: சோழ நாட்டு தேரழுந்தூர், நாகை மாவட்டம்
  • சிறப்புப் பெயர்கள்: கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிப்பேரரசர், கம்பநாடன், கம்பநாட்டாழ்வான், கவி கோமான், கம்ப நாடுடைய வள்ளல்.
  • இயற்றிய நூல்கள்: கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது.
  • "அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி" எனக் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
  • "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே" என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார்.

திருவள்ளுவர்:

  • மனைவி: வாசுகி
  • ஊர்: திருமயிலாப்பூர்
  • சிறப்புப் பெயர்கள்: நாயனார், மாதானுபங்கி,தேவர், முதற் பாவலர், தெய்வ புலவர், நான்முகனார்,செந்நாப்போதார், பொய்யில் புலவர், பெருநாவலர்,வான்புகழ் வள்ளுவர்.
  • பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு" என்று பாராட்டியுள்ளார்.
  • பாரதிதாசன் "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" என்று வள்ளுவரைப் பாராட்டியுள்ளார்.

பாரதியார்:

  • இயற்பெயர்: சுப்பிரமணியம்
  • தோற்றம்: 11 - 12 - 1882
  • மறைவு: 11 - 09 - 1921
  • பிறந்த ஊர்: எட்டயபுரம்
  • சிறப்புப் பெயர்கள்: தேசியக்கவி, விடுதலைக்கவி, அமரக்கவி, முன்னறி புலவன், மகாகவி, பைந்தமிழ்த் தேர்பாகன்.
  • இதழ்கள்: சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, பாலபாரத்.
  • இயற்றிய நூல்கள்: ஞானரதம், தராசு, சந்திரிகையின் கதை, மாதர், கலைகள், பதஞ்சலியோக சூத்திரம், ஹிந்து தருமம்.
  • இயற்றிய கவிதை நூல்கள்: சுதேச கீதங்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு.
  • சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
  • "பாட்டுக்கொரு புலவன் பாரதி" எனக் கவிமணி பாராட்டியுள்ளார்.​

Question 88

TNPSC Group 4 2021• Part A

எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?

  1. AOption (a)

    சாரதா அம்மாள் 

  2. BOption (b)

    மூவலூர் இராமாமிர்தம் 

  3. COption (c)

    முத்துலெட்சுமி 

  4. DOption (d)

    பண்டித ரமாபாய்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

மூவலூர் இராமாமிர்தம் 

Why this answer is correct

சரியான பதில்: மூவலூர் இராமாமிர்தம்

Key Points

  • எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை மூவலூர் இராமாமிர்தம் பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

மூவலூர் இராமாமிர்தம்:

  • பிறந்த ஊர்: மூவலூர்
  • காலம்: 1883 - 1962
  • இவர் தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் ஆவார்.
  • தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற முத்துலெட்சுமி அம்மையாருடன் துணைநின்றவர்.
  • "தாசிகளின் மோசவலை" என்னும் இவரது நூல் தேவதாசிகளின் அவல நிலை பற்றிக் கூறியுள்ளது.
  • அறிஞர் அண்ணா அவர்களால் "தமிழகத்தின் அன்னிபெசன்ட்" எனப் புகழப்பட்டவர்.

Additional Informationமுத்துலெட்சுமி:

  • பிறந்த ஊர்: புதுக்கோட்டை
  • காலம்: 1886 - 1968
  • இவர் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக இருந்தவர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
  • தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம் நிறுவியவர்.
  • தமிழக அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.
  • நடுவணரசு இவருக்குப் பத்ம பூஷன் விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது.

பண்டித ரமாபாய்:

  • பிறந்த ஊர்: கங்கமூலா, கர்நாடகா
  • காலம்: 1858 - 1922
  • இந்தியாவில் பெண் விடுதலைக்காகப் போராடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராவார்.
  • சமஸ்கிருத மொழியில் இவருக்கு ஆழமான புலமை பெற்றிருந்ததால் 'பண்டித', 'சரஸ்வதி' எனும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
  • இவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் 'ஆரிய மகிளா சமாஜ்' என்னும் அமைப்பை நிறுவினார்.
  • மேலும் கைவிடப்பட்ட விதவைகளுக்காக 'சாரதா சதன்' என்னும் அமைப்பைத் தொடங்கினார்.
  • இவர் 'முக்தி சதன்' (சுதந்திர இல்லம்) என்னும் அமைப்பை நிறுவினார்.

சாரதா சட்டம்:

  • பெண் முன்னேற்றக்கின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.
  • அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

Question 89

TNPSC Group 4 2021• Part A

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?

  1. AOption (a)

    கி.பி. 1730

  2. BOption (b)

    கி.பி. 1880

  3. COption (c)

    கி.பி. 1865

  4. DOption (d)

    கி.பி. 1800

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

கி.பி. 1730

Why this answer is correct

சரியான பதில்: கி.பி. 1730

Key Points

  • ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்ச���யார் பிறந்த ஆண்டு கி.பி. 1730 ஆகும்.
  • வேலுநாச்சியாரின் காலம்: கி.பி. 1730 - கி.பி. 1796
  • வேலுநாட்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு கி.பி. 1740.
  • ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.

Additional Informationஇராணி வேலுநாச்சியார்:

  • வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
  • இவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரின் மனைவி ஆவார்.
  • இந்தியாவில் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய முதல் இராணி மற்றும் தமிழர்களால் வீரமங்கை என்றும் அழைக்கப்படுகிறார்.
  • பல மொழிகளில் புலமை பெற்ற இவர் பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் உருது போன்ற மொழிகளில் புலமைப் பெற்றிருந்தார்.
  • 1780 இல் நாட்டை நிர்வகிப்பதற்கான அதிகாரங்களை மருது சகோதரர்களுக்கு வழங்கினார்.
  • நாச்சியாரின் படையில் இருந்த குயிலி எனும் பெண் தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
  • இராணி வேலுநாச்சியாரிடம் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடிய இடம் காளையார் கோவில் ஆகும்.
  • இராணி வேலுநாச்சியார் 1780 இல் தன் கணவரை ஆங்கிலேயர் கொன்றதால் ஹைதர் அலியின் உதவியோடு அவர்களை வென்று சிவகங்கையை மீட்டார்.

Question 90

TNPSC Group 4 2021• Part A

தொல்காப்பியம் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.

  1. AOption (a)

    உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல் 

  2. BOption (b)

    உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

  3. COption (c)

    உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் 

  4. DOption (d)

    உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல் 

  5. EOption (e)

    விடை தெரியவில்லை 

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

Why this answer is correct

சரியான பதில்: உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

Key Points

  • தொல்காப்பியம் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றல் உற்றறிதல் (தொடுதல் உணர்வு), சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் (மனம்) முதலியவை ஆகும்.
அறிவுறிலைஅறியும் ஆற்றல்உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு
ஓரறிவுஉற்றறிதல்புல், மரம்
ஈரறிவுஉற்றறிதல், சுவைத்தல்..சிப்பி, நத்தை
மூவறிவுஉற்றறிதல், சுவைத்தல், நுகர்தல்.கரையான், எறும்பு
நான்கறிவுஉற்றறிதல், சுவைத்தல்,  நுகர்தல், காணல்.நண்டு, தும்பி
ஐந்தறிவுஉற்றறிதல்,  சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல்.பறவை, விலங்கு
ஆறறிவுஉற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்.மனிதன்

Additional Informationதொல்காப்பியம்:

  • ஆசிரியர்: தொல்காப்பியர்
  • இயல்கள்: 27
  • இந்நூல் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ஆகும்.
  • தொல்காப்பியம் 1610 நூற்பாக்களாலானது.
  • தொல்காப்பியம் உரையாசிரியர்கள்: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார்.
  • இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டது.
  • எழுத்து, சொல் அதிகாரங்களில் மொழி இலக்கனைங்களை விளக்குகிறது.
  • பொருளதிகாரத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் இந்நூல் விளக்குகிறது.