சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
- AOption (a)
I, III, IV மட்டும் சரி
- BOption (b)
I, II மட்டும் சரி
- COption (c)
I, II, III மட்டும் சரி
- DOption (d)
அனைத்தும் சரி
- EOption (e)
விடை தெரியவில்லை
View answer & explanationHide answer & explanation
Correct answer
அனைத்தும் சரி
Why this answer is correct
சரியான பதில்: அனைத்தும் சரி
Key Pointsஆண்டாள்:
- ஊர் - ஶ்ரீ வில்லிபுத்தூர்
- இயற்பெயர் - கோதை
- சிறப்புப் பெயர்கள் - சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, நாச்சியார்
- இயற்றிய நூல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
- இவர் விட்டுணு சித்தர் என்ற பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆவார்.
- இவர் பூமித்தாயின் அம்சமாக பிறந்தவராவார்.
- இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம் ஆகும்.
Additional Information
திருப்பாவை:
- இதில் பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.
- இது 30 பாடல்களால் ஆனது.
- திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது ஆகும்.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 - 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.
- இது வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சேர்ந்த பாக்களால் ஆனது.
- இதில் வரும் பாவை என்னும் சொல் பெண்ணைக் குறிக்கும்.
- திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர் இராமானுஜர் ஆவார்.
- இது மார்கழி மாதம் பாடப்படுவது ஆகும்.
- திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்படுபவர் இராமானுஜர் ஆவார்.