'தேடு' - வினைமுற்று சொல்
- AOption (a)
தேடிய
- BOption (b)
தேடினார்
- COption (c)
தேடி
- DOption (d)
தேடுதல்
- EOption (e)
விடை தெரியவில்லை
View answer & explanationHide answer & explanation
Correct answer
தேடினார்
Why this answer is correct
சரியான பதில்: தேடினார்
Key Points
வினைமுற்று:
- தேடினார் என்பது வினைமுற்று.
- முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர். இது முற்றுவினை எனவும் வழங்கப்படும்.
வேர்ச்சொல்:
- பகுப்பாய்வு முறையில் பிரிக்கமுடியாத நிலையில் உள்ள மூலச்சொல் வேர்ச்சொல் எனப்படும்.
- சான்று: தேடு
Additional Information
தொழிற்பெயர் :
- ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
- தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.
- சான்று: தேடுதல்
பெயரெச்சம்:
- தேடிய என்பது பெயரெச்சம்.
- பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும்.
வினைச்சொல்:
- தேடினான் என்பது வினைச்சொல்.
- வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும்.
வினையெச்சம்:
- தேடி என்பது வினையெச்சம்.
- வினையெச்சம் என்பது வினைமுற்று சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.