மோனைத் தொடை வகைப்படும்.
- AOption (a)
ஆறு
- BOption (b)
எட்டு
- COption (c)
ஐந்து
- DOption (d)
மூன்று
- EOption (e)
விடை தெரியவில்லை
View answer & explanationHide answer & explanation
Correct answer
எட்டு
Why this answer is correct
சரியான பதில்: எட்டு
Key Points
- மோனைத் தொடை எட்டு வகைப்படும்.
மோனைத் தொடை:
- தொடை - தொடுத்தல், பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது மோனைத் தொடை ஆகும்.
- எட்டு வகை: அடி மோனை, இணை மோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, கீழ்க்கதுவாய் மோனை, மேற்கதுவாய் மோனை, முற்று மோனை.
Additional Information அடி மோனை:
- ஒரு அடியில் முதல் எழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
- எ.கா: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவக்கால்.
தன்னையே கொல்லும் சினம்.
இணை மோனை: (சீர் மோனை)
- ஒன்று, இரண்டு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது இணை மோனை எனப்படும்.
- எ.கா: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
பொழிப்பு மோனை:
- ஒன்று, மூன்று சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படும்.
- எ.கா: நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
ஒரூஉ மோனை:
- ஒன்று, நான்கு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ மோனை எனப்படும்.
- எ.கா: அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி
கூழை மோனை:
- ஒன்று, இரண்டு, மூன்று சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது கூழை மோனை எனப்படும்.
- எ.கா: அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
கீழ்க்கதுவாய் மோனை:
- ஒன்று, இரண்டு, நான்கு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
- எ.கா: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
மேற்கதுவாய் மோனை:
- ஒன்று, மூன்று, நான்கு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
- எ.கா: செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
முற்று மோனை:
- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்று மோனை எனப்படும்.
- எ.கா:கற்க கசடற கற்பவை கற்றபின்