Search Previous Year Questions

Find real questions from previous competitive exam papers with answers and solutions.

Browse complete papers
200 matching questions · Page 5
Clear

Question 41

TNPSC Group 4 2021• Part A

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்

  1. AOption (a)

    பாவலரேறு பெருஞ்சித்தரனார்

  2. BOption (b)

    தேவநேய பாவாணர்

  3. COption (c)

    பரிதிமாற்கலைஞர்

  4. DOption (d)

    இளங்கோவடிகள்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (a)A.

பாவலரேறு பெருஞ்சித்தரனார்

Why this answer is correct

சரியான பதில்: பாவலரேறு பெருஞ்சித்தரனார்

Key Points

  • 'வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி' என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்தரனார் ஆவார்.

பாவலரேறு பெருஞ்சித்தரனார்:

  • இயற்பெயர்: துரை. மாணிக்கம்
  • காலம்: 1933 - 1995
  • பிறந்த ஊர்: சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
  • பெற்றோர்: துரைசாமி, குஞ்சம்மாள்
  • இயற்றிய நூல்கள்: உலகியல் நூறு, எண்சுவை எண்பது, மகபுதவஞ்சி,பள்ளிப் பறவைகள், கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்.
  • சிறப்புகள்: தேவநேயப் பாவாணரின் வழியைப் பின்பற்றிய தனித்தமிழ் ஆர்வலர்.
  • பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் முதலியவை ஆகும்.
  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது.
  • இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

Additional Informationபரிதிமாற் கலைஞர்:

  • இயற்பெயர்: சூரிய நாராயண சாஸ்திரி
  • பிறந்த ஊர்: மதுரையை அடுத்துள்ள விளாச்சேரி
  • சிறப்புப் பெயர்கள்: தமிழ் நாடக பேராசிரியர், திராவிட சாஸ்திரி, தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்.
  • இயற்றிய நாடகங்கள்: ரூபாவதி, கலாவதி, மானவிசயம், நாடகவியல், சூர்பநகை.
  • "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" என்றவர் பரிதிமாற் கலைஞர் ஆவார்.

தேவநேய பாவாணர்:

  • பிறந்த ஊர்: சங்கரன் கோயில்
  • சிறப்புப் பெயர்கள்: செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெருங்காவலர், மொ���ிஞாயிறு, தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல், தமிழ்மானம் காத்தவர், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டவர்.
  • இயற்றிய நூல்கள்: தமிழ் வரலாறு, முதல் தாய் மொழி, தழிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழர், நாகரீகமும் பண்பாடும்.
  • இவர் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் ஆவார்.
  • இவர் உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் ஆவார்.
  • "தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக்கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி" என்றவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.

Question 42

TNPSC Group 4 2021• Part A

சதுரகராதி என்னும் நூலை இயற்றிவர் யார்?

  1. AOption (a)

    ரா.பி. சேதுப்பிள்ளை

  2. BOption (b)

    சோமசுந்தர பாரதியார்

  3. COption (c)

    குன்றக்குடி அடிகளார்

  4. DOption (d)

    வீரமாமுனிவர்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (d)D.

வீரமாமுனிவர்

Why this answer is correct

சரியான பதில்: வீரமாமுனிவர்

Key Points

  • சதுரகராதி என்னும் நூலை இயற்றிவர் வீரமாமுனிவர் ஆவார்.

வீரமாமுனிவர்:

  • நாடு: இத்தாலி.

  • பிறப்பு: 08-11-1680.

  • இயற்பெயர்: கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி (Constantius Joseph Beschi).

  • வீரமாமுனிவர் நற்செய்திப் பணியாற்ற மதுரையை வந்தடைந்தார்.

  • வீரமாமுனிவர் செய்யும், உரைநடை, இலக்கணம், அகராதி ஆகிய தலைப்புகளில் பல நூல்களை இயற்றியுள்ளார்.

  • வீரமாமுனிவர் இயற்றியதில் தேம்பாவணி, தொன்னூல் விளக்கம், சதுரகராதி ஆகியன குறிப்பிடத்தக்கவை.

  • தமிழில் தோன்றிய முதல் அகராதியான சதுரகராதி வீரமாமுனிவரால் 1732 இல் இயற்றப்பெற்றது.

  • இஸ்மத் சன்னியாசி (தூய துறவி) என சந்தாசாகிப்பால் அழைக்கப்பெற்றார்.

Additional Information

சோமசுந்தர பாரதியார்:

  • இயற்பெயர்: சத்தியானந்த சோமசுந்தரன்
  • பிறந்த தேதி: 27 - 07 - 1879
  • பிறந்த ஊர்: எட்டயபுரம்
  • சிறப்புப் பெயர்: நாவலர்
  • இயற்றிய நூல்கள்: தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும்.
  • எட்டயபுரம் அரண்மனையில் நடைபெற்ற புலவர் கூட்டத்தில் "பாரதி" என்ற பட்டம் பெற்றவர்.
  • வ. உ. சி, "என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது" எனச் ​சோமசுந்தர பாரதியாரைக் குறிப்பிட்டுள்ளார்.

குன்றக்குடி அடிகளார்:

  • இயற்பெயர்: அரங்கநாதன்
  • காலம்: 11 ஜூலை 1925 - 15 ஏப்ரல் 1995
  • ஊர்: நடுத்திட்டு
  • விருதுகள்: 
  • தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு இவருக்கு தேசிய விருது வழங்கியது.
  • நத்திய இதழ்கள்: 
  • மணிமொழி, தமிழகம், அருளோசை
  • படைப்புகள்:
  • அப்பர் விருந்து, திருவாசகத்தேன், தமிழமுது, சமய இலக்கியங்கள், திருவள்ளுவர் காட்டும் அரசியல், குறட்செல்வம்.

ரா.பி. சேதுப்பிள்ளை:

  • பிறந்த ஊர்: இராசவல்லிபுரம்
  • சிறப்புப்பெயர்: சொல்லின் செல்வர், செந்தமிழுக்கு சேதுபிள்ளை
  • பதிப்பித்த நூல்கள்: ஊரும் பேரும், செந்தமிழும் கொடுந்தமிழும், வீரமாநகர், வேலும் வில்லும், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து.
  • உரைநடையில் அடுக்குமொழியையும் செய்யுள்களுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர்.
  • "தமிழின்பம்" என்னும் நூலுக்கு "சாகித்திய அகாதமி பரிசு" வழங்கப்பட்டது.
  • படைப்புகள்:
  • திருவள்ளுவர் நூல் நயம்
  • தமிழகம் ஊரும் பேரும்
  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழின்பம்
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • தமிழ் வீரம்

Question 43

TNPSC Group 4 2021• Part A

கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?

  1. AOption (a)

    பல்லவர்கள் 

  2. BOption (b)

    பாண்டியர்கள்

  3. COption (c)

    சோழர்கள்

  4. DOption (d)

    நாயக்கர்கள்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

பாண்டியர்கள்

Why this answer is correct

சரியான பதில்**: பாண்டியர்கள்**

Key Points

  • கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் பாண்டியர்கள் ஆவர்.

கழுகுமலை வெட்டுவான் கோவில்:

  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கழுகுமலை வெட்டுவான் கோவில் அமைந்துள்ளது.
  • ஒற்றைப் பாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது ‘வெட்டுவான் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • இக்கோயில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் என்னும் பாண்டிய மன்னன் காலத்தில், திராவிடக் கட்டுமானக் கலையமைப்பில் வெட்டப்பட்டது.

Additional Informationபாண்டியர்கள்:

  • திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் பாண்டியர்கள் அமைத்த சிற்பங்களைக் காணலாம்.

பல்லவர்கள்:

  • பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்.
  • காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது.
  • காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளது.
  • திருச்சி, மலைக்கோட்டை போன்ற இடங்களில் பல்லவர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ளது.

சோழர்கள்:

  • சோழர்காலச் சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த சான்றுகளாக அமைந்துள்ள கோயில்கள்,
  • முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில்
  • முதலாம் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம்
  • இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
  • மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அமைத்த திரிபுவன வீரேசுவரம் கோவில்
  • இரண்டாம் பராத்தகச் சோழன் எழுப்பிய மூவர் கோவில்
  • புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் நடன முத்திரைகளுடன் உள்ள சிற்பங்கள்
  • சீனிவாசதல்லூரில் உள்ள குரங்கநாதர் கோவில் சிற்பங்கள்

நாயக்கர்கள்:

  • நாயக்கர்காலச் சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த சான்றுகளாக அமைந்துள்ள கோயில்கள்,
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  • இராமேசுவரம் பெருங்கோவில்
  • திருநெல்வேலி தெல்லையப்பர் கோவில்
  • கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
  • திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில்
  • கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவில்

Question 44

TNPSC Group 4 2021• Part A

புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

  1. AOption (a)

    ஓவிய எழினி

  2. BOption (b)

    சிற்பக்கலை

  3. COption (c)

    மெய்க்கீர்த்தி

  4. DOption (d)

    பைஞ்சுதை

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

மெய்க்கீர்த்தி

Why this answer is correct

சரியான பதில்: மெய்க்கீர்த்தி

Key Points

  • புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை மெய்க்கீர்த்தி ஆகும்.
  • சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • இரண்டாம் இராசராச சோழனின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்தும் வகையில் மெய்க்கீர்த்தி அமைந்துள்ளது.
  • இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 வரிகளைக் கொண்டது.

Additional Informationஓவிய எழினி:

  • ஓவிய எழினி என்பது நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் ஆகும்.
  • சிலப்பதிகாரத்தில் ஓவிய எழினி பற்றிய  குறிப்புகள் அமைந்துள்ளன.

சிற்பக்கலை:

  • தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.
  • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக நடுகல் அமைந்துள்ளது.
  • பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றாகும் .
  • சோழர்காலச் சிற்பக்கலைக்கு முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் சான்றாகும்.
  • நாயக்கர்காலச் சிற்பக்கலைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சான்றாகும்.

Question 45

TNPSC Group 4 2021• Part A

பொருத்துக.

(a)தத்துவ தரிசனம்1.அண்ணா
(b)பிடிசாம்பல்2.வல்லிக்கண்ணன்
(c)தாலாட்டு3.கி.வா. ஜகந்நாதன்
(d)மிட்டாய்காரன்4.ஜெயகாந்தன்

சரியான விடையைத் தெரிவு செய்க.

  1. AOption (a)

    (a) - (3), (b) - (1), (c) - (4), (d) - (2)

  2. BOption (b)

    (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

  3. COption (c)

    (a) - (4), (b) - (2), (c) - (1), (d) - (3)

  4. DOption (d)

    (a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3)

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (d)D.

(a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3)

Why this answer is correct

சரியான பதில்: (a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3) 

Key Points

  • தத்துவ தரிசனம் - வல்லிக்கண்ணன்
  • பிடிசாம்பல் - அண்ணா
  • தாலாட்டு  - ஜெயகாந்தன்
  • மிட்டாய்காரன் - கி.வா. ஜகந்நாதன்

Additional Information

கி.வா. ஜகந்நாதன்:

  • காலம்: 1906 - 1988.
  • இதழாளர், கவிஞர், எழுத்தாளர்.
  • இவர் எழுதிய "வீரர் உலகம்" என்னும் நூலுக்கு 1967ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • சில படைப்புகள்: அதிசய பெண், இருவிலங்கு, கற்பக மலர், ஞான மாலை, விளையும் பயிர்.

ஜெயகாந்தன்:

  • பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் ஆகும்.
  • காலம்: 1934 - 2015
  • விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
  • இவர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
  • பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
  • முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்றினை 'ஒரு கதாசிரியனின் கதை' என்னும் நூலில் எழுதியுள்ளார்.
  • இவர் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தை பெற்றவர் ஆவார்.
  • படைப்புகள்: குருபீடம், யுகசந்தி, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், சுந்தர காண்டம், உன்னைப் போல் ஒருவன்

வல்லிக்கண்ணன்:

  • புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியவர்
  • இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  • "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எறிகின்றன" என பாடியவர் வல்லிக் கண்ணன்

அண்ணா:

  • காலம் - 1909-1969
  • ஊர் - காஞ்சிபுரம்
  • இயற்றிய நூல்கள் - ராஜாதி ராஜா, பேய் ஓடிப்போச்சு, சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், செவ்வாழை.
  • இவர் சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தார்.
  • இவர் “சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை “வாய்மையே வெல்லும்” என்று மாற்றி அமைத்தார்.
  • ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு ம���ற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச் சொற்களை அறிவித்தவர் ஆவார்.
  • இவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
  • இவர் 1935ல் நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
  • இவர் தமிழக முதல்வராக இருந்த போது சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.
  • படைப்புகள்:
  • நெடுங்கதைகள்: மக்கள் தீர்ப்பு, குமரிக்கோட்டம்
  • புதினம்: வெள்ளை மாளிகையில்
  • ​சிறுகதைகள்: ஜபமாலை, சமூகசேவகி சாருபாலா

Question 46

TNPSC Group 4 2021• Part A

சரியான இணைகளைத் தேர்ந்தெடு.

1.பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணக்கவி 2. உவமைக் கவிஞர் - பெருஞ்சித்தரனார் 3. காந்தியக் கவிஞர் - வெ. இராமலிங்கனார் 4. புரட்சிக் கவிஞர் - தாரா பாரதி

  1. AOption (a)

    1ம் மற்றும் 2ம் சரி

  2. BOption (b)

    2ம் மற்றும் 3ம் சரி

  3. COption (c)

    1ம் மற்றும் 3ம் சரி

  4. DOption (d)

    2ம் மற்றும் 4ம் சரி

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

1ம் மற்றும் 3ம் சரி

Why this answer is correct

சரியான பதில்: 1ம் மற்றும் 3ம் சரி

Key Points

  • பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணக்கவி
  • உவமைக் கவிஞர் - சுரதா
  • காந்தியக் கவிஞர் - வெ. இராமலிங்கனார்
  • புரட்சிக் கவிஞர் - பாரதிதாசன்

Additional Informationதாரா பாரதி:

  • இயற்பெயர்: இராதாகிருஷ்ணன்
  • பிறந்த தேதி: 26 - 02 - 1947
  • பிறந்த ஊர்: குவளை
  • சிறப்புப் பெயர்: கவிஞாயிறு
  • படைப்புகள்: புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.​

நாமக்கல் கவிஞர்: 

  • இயர்பெயர்: வே. இராமலிங்கம்பிள்ளை
  • ஊர் - மோகனூர், நாமக்கல் மாவட்டம்
  • இயற்றிய நூல்கள் - மலைக்கள்ளன், என் கதை (சுயசரிதம்), அவனும் அவளும், இலக்கிய இன்பம், காணாமல் போன கல்யாணப்பெண், பிரார்த்தனை, சங்கொலி, மாமன் மகள், தமிழன் இதயம், கவிதாஞ்சலி, சங்கொலி, தாயார் கொடுத்ததனம், தேமதுரத் தமிழோசை.
  • இவர் "காந்தியக் கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் ஆவார்.
  • இவருக்கு நடுவணரசு பத்மபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்தது.
  • இவர் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் ஆவார்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலை போராட்ட வீரர் என பன்முக தன்மை கொண்டவர் ஆவார்.
  • இவர் கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து லோகமித்திரன் என்ற இதழை நடத்தி வந்தார்.
  • இவர் முதலில் வரைந்த ஓவியம் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகும்.
  • இவர் பாரதியாரால் பலே பாண்டியா! நீர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை என்று பாரட்டப் பெற்றவர் ஆவார்.

உடுமலை நாராணகவி :

  • இவரின் இயற்பெயர் நாராணசாமி ஆகும்.
  • இவர் பூவிளைவாடி என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவர் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
  • இவர் நாட்டுப்புற இசையின் எளிமையைக் கொண்டு கவிதைகள் எழுதியுள்ளார்.
  • வேலைக்காரி, ஓர் இரவு, ராஜகுமாரி, நல்லதம்பி முதலிய திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
  • இவர் பகுத்தறிவு கருத்துக்களைத் தன் பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்..

சுரதா:

  • இயற்பெயர்: இராசகோபாலன்
  • சுரதா பெயர் காரணம்:
  • பாரதிதாசனின் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • சுப்புரத்தினதாசனின் சுருக்கமே சுரதா ஆகும்.
  • படைப்புகள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்
  • விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.
  • சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள்: இலக்கியம், விண்மீன்,ஊர்வலம்.
  • சுரதா “உவமைக் கவிஞர்” என்று பாராட்டப்படுகிறார்.​

பாரதிதாசன்:

  • இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்
  • பிறந்த ஊர்: புதுச்சேரி
  • தோற்றம்: 29 - 04 - 1891
  • மறைவு: 21 - 04 - 1964​
  • சிறப்புப் பெயர்கள்: பாவேந்தர், புரட்சிக் கவிஞர், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ்.
  • இயற்றிய நூல்கள்: இசை அமுது, பாண்டியன் பரிச, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம், மணிமேகலை வெண்பா.
  • இயற்றிய நாடகங்கள்: சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்திமுற்றப் புலவர், அமைதி ஊமை.
  • பாரதிதாசனின் "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Question 47

TNPSC Group 4 2021• Part A

முடியரசன் இயற்றாத நூல் எது?

  1. AOption (a)

    பூங்கொடி

  2. BOption (b)

    நீலமேகம்

  3. COption (c)

    வீரகாவியம்

  4. DOption (d)

    காவியப்பாவை

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (b)B.

நீலமேகம்

Why this answer is correct

சரியான பதில்: நீலமேகம்

Key Points

  • முடியரசன் இயற்றாத நூல் நீலமேகம் ஆகும்.

  • முடியரசனின் படைப்புகள்:

  • பூங்கொடி,

  • வீரகாவியம்,

  • காவியப்பாவை,

  • புதியதொரு விதி செய்வோம்,

  • முடியரசன் கவிதைகள்,

  • வீரகாவியம்,

  • தமிழ் முழக்கம்.

  • கவிதை: சாதி என்பது நமக்கு ஏனோ

Additional Information

முடியரசன்:

  • இயற்பெயர்: துரைராசு
  • ஊர்: பெரியகுளம்
  • சிறப்பு:
  • 'இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்' - (முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விஸ்வநாதனின் கூற்று),
  • 'என் மூத்த வழிதோன்றல் முடியரசனே எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன் - (பாரதிதாசனின் கூற்று)
  • 'திராவிட நாட்டின் வானம்பாடி' என்று அழைக்கப்படுபவர் துரைராசு ஆவார்.
  • இது பேரறிஞர் அண்ணாவின் கூற்றாகும்.

Question 48

TNPSC Group 4 2021• Part A

'பெண் எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது' - எனப் பாடியவர்

  1. AOption (a)

    பாரதியார்

  2. BOption (b)

    பசுவய்யா

  3. COption (c)

    பாரதிதாசன்

  4. DOption (d)

    நாமக்கல் கவிஞர்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

பாரதிதாசன்

Why this answer is correct

சரியான பதில்: பாரதிதாசன்

Key Points

பாவேந்தர் பாரதிதாசன்கூற்றுகள்:

  • பெண்எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது.

  • பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே​

பாரதிதாசன்:

  • இவர் எழுதிய 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' எனத்தொடங்கிடும் பாடலானது புதுவை அரசின் தமிழ்தாய் வாழ்த்தாகும்.​
  • இவர் பிரெஞ்சு மொழியிலிருந்து தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் மாற்றினார்.
  • இவர் நடத்திய இலக்கிய இதழ் 'குயில்' ஆகும்.​
  • படைப்புகள்:
  • பாண்டியன் பரிசு,
  • இசையமுது,
  • கண்ணகி புரட்சிக் காப்பியம்,
  • பிசிராந்தையார்,
  • தமிழியக்கம்.

Additional Information

பாரதியார்:

  • ​ஊர்: எட்டயபுரம்
  • பிறப்பு: 11 திசம்பர் 1882
  • இறப்பு: 11 செப்டம்பர் 1921
  • பாரதியார் நடத்திய இதழ்கள்: சூரியோதயம், இந்தியா, விஜயா, கர்மயோகி.
  • இவரின் கூற்றுகள்:
  • நாடும் மொழியும் நமதிரு கண்கள்,
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணொம்,
  • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்.
  • 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 

பேணி வளர்த்திடும் ஈசன்;'

  • 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'.

  • பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்
  • சிறப்புத் தொடர்கள்: 
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணியின் கூற்று),
  • சென்னையின் தமிழ்க் கவிஞன் (ஆங்கில பத்திரிகையாளர் நெவின்சனின் கூற்று).

நாமக்கல் கவிஞர்:

  • "அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வக்கவி பாரதி ஓர் ஆசான்" எனப் பாடியவர் நாமக்கல் கவிஞர்.
  • இயற்பெயர்: வெ. இராமலிங்கம் பிள்ளை
  • ஊர்: மோகனூர்
  • விருது: பத்ம பூஷண்
  • இவர் தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் மற்றும் சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியும் ஆவார்.
  • படைப்புகள்:
  • மலைக்கள்ளன்,
  • கம்பனும் வால்மீகியும்,
  • சங்கொலி,
  • அவனும் அவளும்.

பசுவய்யா:

  • காலம்: 1931 - 2005
  • ஊர்: மகாதேவர் கோயில் கிராமம்
  • இவர் பெயரில் வழங்கப்படும் விருதுகள் 'தமிழ் கணினிக்கான விருது', 'இளம் படைப்பாளர் விருது' ஆகும்.
  • இவர் 'காலச்சுவடு' என்னும் இதழைத் தொடங்கினார்.
  • படைப்புகள்:
  • நாவல்கள்: ஒரு புளிய மரத்தின் கதை, ஜே. ஜே. சில குறிப்புகள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள்.
  • மொழிபெயர்ப்பு நூல்கள்:
  • தொலைவிலிருக்கும் கவிதைகள்,
  • தகழி சிவ சங்கரம்பிள்ளை எழுதிய மலையாளப் புதினங்களைத் தழுவி இவரால் எழுதப்பட்ட நூல்கள் 'செம்மீன்', 'தோட்டியின் மகன்' முதலியனவாகும்.
  • கவிதை:
  • நடுநிசி நாய்கள்,
  • யாரோ ஒருவனுக்காக.

Question 49

TNPSC Group 4 2021• Part A

'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்

  1. AOption (a)

    நாமக்கல் கவிஞர்

  2. BOption (b)

    சுரதா

  3. COption (c)

    பாரதிதாசன்

  4. DOption (d)

    பாரதியார்

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

பாரதிதாசன்

Why this answer is correct

சரியான பதில்: பாரதிதாசன்

Key Points 

பாரதிதாசன் பாடியவை: 

  • "இருட்டறையில் உள்ளதடா உலகம்"
  • “நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்;”
  • “புதியதோர் உலகு செய்வோம்”
  • “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்”
  • “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே”

Additional Information 

பாரதியார் பாடியவை:

  • “காக்கை குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”
  • “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”

நாமக்கல் கவிஞர் பாடியவை:

  • “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
  • “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”
  • “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”

சுரதா:

  • இயற்பெயர்: தி. ராசகோபாலன்
  • ஊர்: பழையதூர்
  • படைப்புகள்:
  • சாவின் முத்தம்
  • தேன்மழை,
  • துறைமுகம்,
  • சுவரும் சுண்ணாம்பும்,

Question 50

TNPSC Group 4 2021• Part A

கீழ்க்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.

  1. AOption (a)

    தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.

  2. BOption (b)

    நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.

  3. COption (c)

    நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

  4. DOption (d)

    தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க

  5. EOption (e)

    விடை தெரியவில்லை

View answer & explanation

Correct answer

Answer: (c)C.

நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

Why this answer is correct

சரியான பதில்: நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்

Key Points

  • நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது சரியான பழமொழி ஆகும்.

Additional Informationபழமொழிகள்:

  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • இனம் இனத்தோடு சேரும்.
  • வீட்டில் எலி வெளியில் புலி.
  • தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.
  • கல்வி கரையில், கற்பவர் நாள் சில.
  • ஆழம் அறியாமல் காலைவிடாதே.