'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
- AOption (a)
ஆத்திச்சூடி
- BOption (b)
கொன்றைவேந்தன்
- COption (c)
நல்வழி
- DOption (d)
மூதுரை
- EOption (e)
விடை தெரியவில்லை
View answer & explanationHide answer & explanation
Correct answer
மூதுரை
Why this answer is correct
சரியான பதில்: மூதுரை
Key Points
- 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் மூதுரை ஆகும்.
பாடலின் பொருள்:
- மன்மைனயும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர் ஆவார்.
மூதுரை:
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
- இந்நூல் நீதிநூல்களில் ஒன்று ஆகும்.
- இந்நூலின் ஆசிரியர் ஒளவையார் ஆவார்.
- இந்நூல் வாக்குண்டாம் என்றும் அழைக்கப்படுகிறது.
Additional Informationஆத்திச்சூடி:
- ஆத்திச்சூடி என்ற நீதிநூலை இயற்றியவர் ஒளவையார் ஆவார்.
- இந்நூலில் 109 பாடல்கள் உள்ளன.
- ஆத்திச்சூடி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.
- ஆத்திச்சூடி உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ககர வருக்கம், சகர வருக்கம், தகர வருக்கம், நகர வருக்கம், பகர வருக்கம், மகர வருக்கம், வகர வருக்கம் எனப் பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது.
நல்வழி:
- இந்நூலை இயற்றியவர் ஒளவையார் ஆவார்.
- நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நெறிகளைக் கூறுவது நல்வழி நூல் ஆகும்.
- இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு மொத்தம் 41 வெண்பாக்கள் அமைந்துள்ளன.
கொன்றைவேந்தன்:
- கொன்றை என்பது ஒரு மரம். அதில் மலரும் மலர் கொன்றை மலர் எனப்படும்.
- இந்நூல் முருகனைப் போற்றி பாடப்பட்டுள்ளது.
- ஆசிரியர்: ஒளவையார்
- இந்நூலில் மொத்தம் 91 பாடல்கள் உள்ளன.