'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
- AOption (a)
தாலாட்டுப்பாட்டு
- BOption (b)
கும்மிப் பாட்டு
- COption (c)
பள்ளுப்பாட்டு
- DOption (d)
வில்லுப் பாட்டு
- EOption (e)
விடை தெரியவில்லை
View answer & explanationHide answer & explanation
Correct answer
பள்ளுப்பாட்டு
Why this answer is correct
சரியான பதில்: பள்ளுப்பாட்டு
Key Points
- 'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு பள்ளுப்பாட்டு ஆகும்.
பள்ளு:
- வயல்களில் உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும்.
- பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- இது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படும்.
- தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும்.
- பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் அமைந்துள்ளது.
- பள்ளு நூல்கள்: ஞானப்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப்பள்ளு, வடகரைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீகாழிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு, தில்லைப் பள்ளு, வையாபுரிப் பள்ளு, கண்ணுடை அம்மை பள்ளு.
Additional Informationதிருமலை முருகன் பள்ளு:
- முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு பாடபட்ட நூல் ஆகும்.
- இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் கொண்டு பாடப்பட்டது.
- இந்நூல் 'பள்ளிசை' என்றும் 'திருமலை அதிபர் பள்ளு' எனவும் வழங்கப்படுகிறது.
- திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர்.
- இவரின் காலம் 18 ஆம் நூற்றாண்டு ஆகும்.